February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் அரச உத்தியோகத்தர் ஒருவர் யாழில் கைது!

அரச வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் அரச உத்தியோகத்தர் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வடமாராட்சியை சேர்ந்த குறித்த பெண் அரச வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை சந்திக்கச் சென்ற போது, அங்கிருந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் தன்னிடம் பாலியல் ,லஞ்சம் கேட்டதாக அந்தப் பெண் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரிடம் அந்தப் பெண் முறையிட்டதை தொடர்ந்து, அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாலியல் ,லஞ்சம் கேட்டதாக கூறப்படும் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தனது நெருங்கிய நண்பர் எனவும், அவர் ஊடாக வேலைவாய்ப்பை பெற்றுத்தர முடியுமெனவும் தெரிவித்தே சந்தேக நபர் பாலியல் இலஞ்சம் கேட்டுள்ளதாக அந்தப் பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.