நீதிமன்ற அவமதிப்பு வழங்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புறுமை இரத்துச் செய்யப்பட்டதை தொடர்ந்து வெற்றிடமான அவரின் ஆசனத்திற்கு அஜித் மான்னப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி இன்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அஜித் மான்னப்பெரும பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அரசியலமைப்பின் பிரகாரம் அவரின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிட்டு 47,212 வாக்குகளை பெற்று. விருப்பு வாக்கு பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ள அஜித் மான்னப்பெருமவின் பெயரை பாராளுமன்றத்தில் வெற்றிடமாகியுள்ள ஆசனத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வர்த்தமானியில் அறிவித்திருந்தது.
இதனையடுத்து அஜித் மான்னப்பெரும இன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.