
பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ள யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்யுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
யாழ். மாநகர சபையின் புதிய காவல் படை விவகாரம் தொடர்பாக இன்று அதிகாலை மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கைது செய்யப்பட்டுள்ள மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
The @TnpfOrg unreservedly condemns the arrest of Manivannan by the TID and calls for his immediate release. The severe racial and political insecurities of this regime have reached such heights that a steady path towards fascism is inevitable. #tamil #lka https://t.co/pAvHid3Ixf
— Gajen Ponnambalam MP (@GGPonnambalam) April 9, 2021
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில், ”யாழ் மநாகர சபை மேயர் மணிவண்ணன் பயங்கவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமையை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன் அவரை உடனடியா விடுதலை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.