ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட சந்திப்பு ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர மற்றும் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் கலந்துகொண்டனர்.
அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சர் உதய கம்மன்பில, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ விதாரண, ஏ.எல்.எம்.அதாவுல்லா, அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் முன்னாள் அமைச்சர் டியூ. குணசேகர ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பில் சமகால அரசியல் நிலைவரம் மற்றும் மாகாண சபை சட்ட வரைவு தொடர்பிலும் பேசப்பட்டதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.