February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய காவல் பிரிவு விவகாரம்: யாழ். மாநகர சபையின் அமர்வை ஈ.பி.டி.பி புறக்கணித்தது!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இன்றைய அமர்வை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி புறக்கணித்துள்ளது என்று மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

மாநகர சபை முதல்வரினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாநகர காவல் பிரிவு தொடர்பில் தம்முடன் கலந்துரையாடப்படாமையே இன்றைய புறக்கணிப்பிற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது கட்சியின் ஆதரவுடன் ஆதிகாரத்தைப் பெற்றுக்காண்டவர்கள், முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் போது அவை தொடர்பாக எமம்முடனும் கலந்துரையாட வேண்டியது தார்மீக கடமையாகும் என்று யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

ஆனால் காவல்படை உருவாக்கம் தொடர்பாக எம்மோடு  கலந்துரையாடப்படவில்லை எனவும், இதுதொடர்பாக அதிருப்தியை வெளிப்படுத்தவே இன்றைய அமர்வை புறக்கணித்துள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.