May 25, 2025 0:05:59

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Update- ‘திருமதி ஸ்ரீலங்கா’ சர்ச்சை: திருமதி உலக அழகி கரோலைன் ஜூரி பொலிஸ் பிணையில் விடுதலை!

திருமதி உலக அழகி கரோலைன் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திர ஆகியோர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

திருமதி உலக அழகி கரோலைன் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திர ஆகியோர் கறுவாத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

திருமதி ஸ்ரீலங்கா அழகிப் போட்டியில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்த போதே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரோலைன் ஜூரியின் முறையற்ற நடத்தையால் தான் பாதிக்கப்பட்டதாக புஷ்பிகா கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

திருமதி ஸ்ரீலங்கா போட்டியின் வெற்றியாளர் புஷ்பிகாவுக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை அகற்றி, இரண்டாம் இடத்துக்கு வந்த போட்டியாளருக்கு அணிவித்ததில் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நடப்பு திருமதி உலக அழகியான கரோலைன் ஜூரியின் நடத்தை தொடர்பாக ‘திருமதி உலக அழகி’ போட்டி ஏற்பாட்டுக் குழு கவலை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.