‘சிங்களே அபி’ அமைப்பின் தலைவர் ஜம்புரேவெல சந்திர ரதன தேரர் இன்று கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டையில் சட்ட விரோத ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டிலேயே தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்புரேவெல சந்திர ரதன தேரருடன் இன்னுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சட்ட விரோத ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸ் ஜீப் ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஜீப்பைத் தாக்கியதாகவும் தேரர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.