
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படத்தை தனது கைத் தொலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பணத்தில் இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றததில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனுக்கு எதிராக இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120 ஆம் பிரிவின் கீழ் வெறுப்புணர்வை தூண்டுதல் அல்லது எத்தனித்தலின் கீழ் ‘பி’அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.