துணி இறக்குமதியை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பிற்கு இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக பத்திக், கைத்தறி துணி மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
துணி இறக்குமதியை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே வெளியுறவு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பிலும் நாட்டின் ஏனைய நகரங்களிலும் ஏராளமான பத்திக் மற்றும் ஆடை விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது நாட்டிற்கு பெரிய பலம்.
நெசவு ஆடை மற்றும் பத்திக் புடவை இறக்குமதி ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ள நிலையில், துணி இறக்குமதி தடையை வர்த்தமானியினூடாக வெளியிட உள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் பத்திக் ஆடை இறக்குமதி மற்றும் துணி இறக்குமதியை முற்றிலும் நிறுத்துவதன் மூலம் நாட்டில் உற்பத்தியாளர்களுக்கு மிகப் பெரிய சந்தை வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.