photo : web/navy
இலங்கைக்கு சீனாவால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட “பராக்கிரமபாகு” போர் கப்பலின் இயக்கம் முழுமையாக சீர்செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக குறித்த கப்பலில் பல கோளாருகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
கப்பலில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் ‘கப்பல் இயக்கத்தில் உள்ளது‘ எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
கப்பலில் பராமரிப்புகளை மேற்கொள்ள சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே, சீன நிபுணர் குழு இலங்கை வந்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தக் கப்பல் இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சீன தேசிய பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ளது.
பராக்கிரமபாகு கப்பலை இலங்கைக்கு அன்பளிப்பு செய்வதற்கான ஒப்பந்தம் 2016 ஒக்டோபர் 13 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த கப்பல் தற்போது இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்குகிறது.