உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ள போதிலும், உண்மையான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதலின் நடிகராக சஹ்ரான் செயற்பட்டிருக்கலாம்.சாரா என்ற நடிகை காணாமல் போயுள்ளார்.இந்த நிலையில், தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவு தொடர்பிலும் பக்கம் பின் அபு(Pakkam Bin-abu) என்ற நபர் குறித்தும் ஆராய வேண்டியுள்ளது.
அதேபோல் ,உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்டு வழிநடத்தியவர்கள் வௌியில் உள்ளனரா என்பது குறித்தும் ஆராய வேண்டும் எனவும் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.