November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஒரு இனத்தை மையப்படுத்தி அவர்களை அடக்க நினைக்காதீர்கள்” : ரிஷாட் பதியுதீன்

”ஒரு இனத்தை மையப்படுத்தி அவர்களை அடக்க நினைக்காதீர்கள், நாட்டின் மீது பாசத்துடன் நடந்துகொள்ளுங்கள்” என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே ரிஷாட்”ஒரு இனத்தை மையப்படுத்தி அவர்களை அடக்க நினைக்காதீர்கள்” : ரிஷாட் பதியுதீன் பதியுதீன் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டில் கடந்த 10 வருடங்ளாகவே முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது என்று இதன்போது குறிப்பிட்ட அவர், இந்த காலப்பகுதியில் அலுத்கம, திகன, கொழும்பு கிரேண்ட்பாஸ் ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் தற்போது சஹரானின் செயற்பாடுகளை அடிப்படையாக கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், ஆனால் உண்மையான முஸ்லிம்கள் சஹரான் போன்றோரின் செயற்பாடுகளை அங்கீகரிக்க மாட்டார்கள் என்றும் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், அதேபோன்று அந்த விடயத்தில் கைது செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான அப்பாவிகளை விடுதலை செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.