(Photo : facebook/Thushara Indunil)
‘மூன்று கிலோ அரிசியை இரண்டு வாரங்களுக்கு உண்பதற்கு மக்கள் என்ன வீட்டுக் குருவிகளா? அல்லது காகமா? என எதிர்க்கட்சி உறுப்பினர் துஷார இந்துநில் அமரசேன கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு குடும்பத்திற்கு இரண்டு வாரங்களுக்கு மூன்று கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ சீனி போதுமானது என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.
சதொச நிறுவனங்களில் மூலம் வழங்கப்படும் ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப்பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி குறித்து பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு கிலோ அரிசியை இரண்டு வாரங்களுக்கு உண்பதென்றால், சாதாரணமாக நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றில் நபர் ஒருவருக்கு 71 கிராம் என்ற அடிப்படையில் பங்கிட வேண்டும்.
எமது நாட்டு மக்கள் பெரும்பாலும் மூன்று வேளையும் சோறு உண்பவர்கள். இந்த 71 கிராம் அரிசியில் ஒருவரது வயிறு நிறையும் என நினைக்கின்றீர்களா? மக்கள் என்ன வீட்டுக் குருவிகளா அல்லது காகமா? காகத்துக்குக் கூட 17 கிராம் அரிசி தேவைப்படும். எந்த அடிப்படையில் இந்த கணக்கைக் கூறினீர்கள் எனவும் அமைச்சர் இதன் போது கேள்வி எழுப்பியுள்ளார்.