கொழும்பு துறைமுகத்தில் அரச புலனாய்வுப் பிரிவின் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக தெரிவித்துள்ளார்.
துறைமுக அதிகாரசபையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
துறைமுகத்தின் பாதுகாப்பு பிரிவை சீரமைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் இடம்பெறும் இலஞ்ச, ஊழல் மற்றும் களவுகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அரச புலனாய்வுப் பிரிவின் அலுவலகம் திறக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தினுள் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவின் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதிகளவான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதைப் போன்று, புலனாய்வுப் பிரிவு அலுவலகம் மூலம் ஊழலை இல்லாதொழிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
2021 முதல் காலாண்டில் துறைமுக அதிகாரசபை சிறந்த இலாப வளர்ச்சியைக் காட்டியுள்ளதாகவும் ஜெனரல் தயா ரத்னாயக தெரிவித்துள்ளார்.