யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைக்கப்பட்டுள்ள புதிய காவல் பிரிவு இன்று முதல் தமது பணியை ஆரம்பித்துள்ளது.
யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகள், கழிவகற்றல் பொறிமுறைகள் மற்றும் மாநகரின் ஒழுங்குகளை காண்காணிக்கும் வகையில் இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய காவல் பிரிவு இன்று காலை பரீட்சார்த்தமாக நல்லூர் வீதியில் தமது கடமைகளை ஆரம்பித்திருந்தது.
நாளைய தினம் முதல் உத்தியோகபூர்வமாக புதிய காவல் பிரிவு ஆரம்பித்து வைக்கப்படவுள்ள நிலையில், நல்லூர் வீதியில் வாகன எண்ணெய் ஊற்றப்பட்டிருந்தமைமையினால் அந்த வீதியில் ஏற்படக் கூடிய விபத்துகளை தவிர்க்கும் வகையில் இன்றைய தினம் அவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.