“அடுத்த சில நாட்களில், இலங்கை மக்களின் நடத்தைகளைப் பொறுத்தே நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடையவோ அல்லது அதிகரிக்கவோ வாய்ப்பு உள்ளது” என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காலத்தில் எவ்வாறு நடந்துகொள்வது என்பது குறித்து இலங்கை மக்களுக்கு சிறந்த புரிதல் உள்ளதாக தெரிவித்த இராணுவ தளபதி, எதிர்வரும் பண்டிகை காலங்களில் சரியான சுகாதார வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அத்தோடு புத்திசாலித்தனமான இலங்கை மக்கள் இந்த சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்றவாறு செயல்படுவார்கள் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண எழுமாறாக சோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.