July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார் ரஞ்சன் ராமநாயக்க!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன சபையில் இன்று அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளமை தொடர்பில் பராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு ரஞ்சன் ராமநாயக்க வெற்றிபெற்றிருந்தார்.

இந்நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து கடந்த ஜனவரி 12 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து, தனது பாராளுமன்ற ஆசனத்தை இரத்து செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கக் கோரி ரஞ்சன் ராமநாயக்க சார்பில் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

எனினும், குறித்த ரீட் மனுவை கடந்த 5ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இதனையடுத்து அவரின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் இன்று தெரிவித்துள்ளார்.