July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றுக்கான விலை ரூ .500 ஆக உயரக்கூடும்’

அரசாங்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றுக்கான விலை 500 ரூபாவாக  உயரக்கூடும் என்று பேக்கரி உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேங்காய், முள்ளுத்தேங்காய் மற்றும் காய்கறி எண்ணெய்களுக்கு இடையேயான வேறுபாட்டை பிரித்து அறிவதற்கான வழிகாட்டல்களை அரசாங்கம் ஏன் இன்னும் வெளியிடவில்லை எனவும் சங்கத்தின் தலைவர் அசெல சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாம் எண்ணெய்யின் இறக்குமதியை அரசாங்கம் தடை செய்த போதிலும் நாட்டில் தற்போது உள்ள பாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்க்கு இடையேயான வித்தியாசத்தை அடையாளம் காண முடியாது உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வர்த்தகர்கள் தேங்காய் எண்ணெய்யுடன் பாம் எண்ணெய்யை கலந்து மோசடி செய்து நுகர்வோரிடமிருந்து அதிக லாபம் பெறுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார் .

புத்தாண்டு காலத்தில் எண்ணெய்யின் பயன்பாடு அதிகரிக்கும் நிலையில், உள்நாட்டில் நிலவும் தேங்காய் எண்ணெய்க்கான கேள்வியின் காரணமாக எண்ணெய்யின் விலை சடுதியாக அதிகரிக்கும் என்றும் அசெல சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.