
(File image)
கொழும்பு – கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி விதி பகுதியில் வீடு ஒன்றின் அருகே வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வெட்டுக்காயங்களுடன் ஒருவர் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியில் வசிக்கும் 22 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.