
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஓய்வுபெற்ற அதிகாரிகளை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களம் என்பது, திறமையான அதிகாரிகள் இருக்கும் இடம் என்றும் இதனால் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் சேவைகள் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
இதன்படி ஓய்வுபெற்ற திறமையான அதிகாரிகள் மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.