
தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) பிரதிநிதிகள், பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹல்டனை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சதிப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோவின் ஊடக பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பான விடயங்கள், அரசியல் தீர்வு, மாகாணசபை தேர்தல் , நில அபகரிப்பு, அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதாகவும், குறித்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்றிருந்ததாகவும் கு.சுரேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் டெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் மற்றும் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.