January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி 

மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புகளை ஏப்ரல் 12 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்க முடியுமென்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவித்துள்ளார்.

அவர் இன்று பாராளுமன்றத்தில் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் சுகாதார ஒழுங்குவிதிகளுக்கமைய பாடசாலைகள் திறக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர், தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க முடியுமென்று அறிவித்துள்ளதாகவும், இதன்படி 12 ஆம் திகதிக்கு பின்னர் வகுப்புகளை நடத்த முடியுமென்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை வகுப்பொன்றில் நூறுக்கும் குறைவான மாணவர்களே இருக்க முடியும் என்பதுடன், அவர்களிடையே சமூக இடைவெளிகள் பேணப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.