July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கான சுபநேர பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கான சுபநேர பத்திரம் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

பாரம்பரியங்களுக்கேற்ப அரங்கு கலை மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, சுபநேர பத்திரத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

புதுவருடப் பிறப்பு, புண்ணியகாலம், உணவு சமைத்தல், அடுப்பு மூட்டுதல், உணவு பரிமாறுதல், தலைக்கு எண்ணெய் வைத்தல் மற்றும் தொழிலுக்காக புறப்படுதல் ஆகிய விடயங்கள் சுபநேர பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தேசிய மரபுரிமைகள், அரங்கு கலை மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் நிஷாந்தி ஜயசிங்க, கலாசார அலுவல்கள் பணிப்பாளர் தரணி அனோஜா கமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, பிலவ தமிழ் வருடம் ஏப்ரல் மாதம் 14ம் திகதி,  புதன்கிழமை காலை 1.39 மணிக்கு பிறக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.