
சிங்கராஜ வன அழிப்புக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி ஐநா அலுவலகத்துக்கு மகஜர் சமர்ப்பித்து, ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளது.
உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்தில் நீர்த்தேக்கம் அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி, கொழும்பு ஐநா அலுவலகத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மகஜர் கையளித்துள்ளது.
கொழும்பு, ஐநா அலுவலகத்துக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் நாட்டில் இடம்பெறும் அனைத்து வகையான காடழிப்பு நடவடிக்கைகளுக்கும் எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம், தவிசாளர் வஜிர அபேவர்தன, கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தீப் சமரசிங்க, ஆசு மாரசிங்க மற்றும் சனத் ரத்னபிரிய உட்பட உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.