கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள் புத்தாண்டின் பின்னர் திறக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே, பல்கலைக்கழகங்களைத் திறப்பதற்கான உரிய திகதி குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்
அத்துடன், பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கையினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களை அறிமுகப்படுத்துவதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட அளவில் பரீட்சைகளை நடத்துவதற்கான அனுமதியினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஏற்கனவே வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது