புத்தாண்டு காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிக்கும் நபர்கள் எழுமாறாக அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என கொவிட் -19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், புத்தாண்டு காலத்தின் போது சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை தொடர்ந்து கட்டுப்படுத்துவதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பார்கள் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தின் போது சுகாதார வழிகாட்டல்களை பொது மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்குமாறும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், புத்தாண்டு காலத்தின் போது நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.