வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விசேட பொருளாதார மத்திய நிலையங்களை விரைவில் திறந்து வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் பொருளாதார மத்திய நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
அவற்றின் நிர்வாக மற்றும் முகாமைத்துவ நிதியத்தை நிறுவுவதற்கும், முறையான பொறிமுறையை பின்பற்றி அங்கு வியாபார அலகுகளை ஒதுக்கி வழங்குவதற்கும் கமத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விவசாயிகளின் உற்பத்திகளை நேரடியாக சந்தைப்படுத்துவதற்கும், போட்டித்தன்மை மூலம் மிகவும் வினைத்திறனான விலைப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கும் இயலுமான வகையில் இந்த பொருளாதார மத்திய நிலையங்கள் திறந்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.