
file photo: Police media
இலங்கையின் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை உயிரிழந்துள்ளார்.
குளியாப்பிட்டிய பகுதியில் சிலை உடைப்பு சம்பவமொன்றின் சந்தேக நபராக கைது செய்யப்பட்ட இவர், வாரியபொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
சந்தேக நபருக்கு நேற்று இரவு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
45 வயதுடைய இந்திய பிரஜை மாரடைப்பு காரணமாக வாரியபொல மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரின் உடல் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக வாரியபொல மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.