
சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் வே.சிவஞானசோதி காலமானார்.
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட வே.சிவஞானசோதி பல அமைச்சுகளில் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.
குறிப்பாக இந்து கலாசார அமைச்சு, பாரம்பரிய சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, வடக்குச் செயலணி, நல்லிணக்க அமைச்சு ஆகியவற்றின் செயலாளராகவும் அவர் கடமையாற்றினார்.
இறுதியாக இவர் பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராகவும் கடமையாற்றியவர்.
தமக்கு கிடைத்த பதவிகளை பயன்படுத்தி தமிழர் பிரதேசத்திற்கு தேவையான அபிவிருத்தித் திட்டங்களை முன்மொழிந்து நேரடியாக சென்று பல திட்டங்களை மேற்பார்வை செய்து திறமையாக செய்து முடித்தவர்.
வடக்கில் 10 ஆயிரம் பொருத்து வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுத்தபோது, அது வடக்கு மக்களுக்கு சரியானதாக அமையாது எனக் கூறி எதிர்த்தவர்.
சுகயீனம் காரணமாக கொழும்பு அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பயனின்றி காலமானார்.
இவர் யாழ்.இந்து கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.