இலங்கையில் தங்கியுள்ள சீன பிரஜைகளுக்கு ‘சினோபார்ம்’ தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
இலங்கையில் 4,500 சீன பிரஜைகள் உள்ள நிலையில் 1600 சீன பிரஜைகளுக்கு ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 3 தினங்களில் அனைத்து சீன பிரஜைகளுக்கும் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் தினுகா குருகே தெரிவித்தார்.
1,600 🇨🇳Chinese nationals received #Sinopharm #COVID19 #vaccine today in 4 places in #SriLanka , with no adverse effect report. Remaining 1,000 recipients expected tomorrow. 2,600=0.87% of 600k doses stock.
Greatest gratitude ❤️ to @MoH_SriLanka and all the 🇱🇰medical workers. pic.twitter.com/EF2bHEu1l4
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) April 5, 2021
சீன அரசாங்கத்தின் நன்கொடையாக வழங்கப்பட்ட 6 இலட்சம் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் கடந்த மாத இறுதியில் நாட்டை வந்தடைந்திருந்தன.
எனினும் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கை மக்களுக்கு பயன்படுத்துவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இதுவரை கிடைக்கப் பெறவில்லை.
இதற்கான அனுமதியை வழங்க உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்திற்காக காத்திருப்பதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.