ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்ந்த அமைச்சரவை உப குழு, அதன் தேடல்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது.
அமைச்சரவை உப குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷ இந்த ஆய்வு அறிக்கையைக் கையளித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்வதற்கான 2021 பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டது.
ஜனாதிபதி ஆணைக்குழு 78 பரிந்துரைகளை முன்வைத்துள்ள நிலையில், அவற்றை எவ்வாறு, எந்தெந்த நிறுவனங்களின் ஊடாக அமுல்படுத்த முடியும் என்பதை அமைச்சரவை உப குழு கண்டறிந்துள்ளது.
பரிந்துரைகளை ஆராய அமைச்சரவை உப குழுவுக்கு வழங்கப்பட்ட காலத்துக்கு மேலதிகமாக இரண்டு வார காலம் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.