January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தீங்கு விளைவிக்கும் பொருட்களை இறக்குமதி செய்யும் வர்த்தகர்கள் பாரபட்சம் இன்றி தண்டிக்கப்பட வேண்டும்; மகா சங்கம்

நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் வர்த்தகர்கள் பாரபட்சம் இன்றி தண்டிக்கப்பட வேண்டும் என்று மகா சங்கம் தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக நாட்டில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றமை  வெளிப்படுத்தப்பட்டு வந்துள்ளன.

எனினும், எந்த ஒரு அதிகாரியும் இது தொடர்பில் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுத்ததாக தெரியவில்லை என அஸ்கிரிய பீடத்தின் பிரதி பதிவாளர் சங்கைக்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நபர்கள் நாட்டு மக்களுக்கு விஷம் அடங்கிய உணவு பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்கின்றனர்.

இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.அரசாங்கம் இப்படியான நபர்களுக்கு ஒருபோதும் பாதுகாப்பு வழங்கக்கூடாது என்றும் சங்கைக்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.