பாம் எண்ணெய் வகைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில், நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு அமைவான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதியின் செயலாளரினால் ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள பாம் எண்ணெய் விநியோகத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறு சுங்கப் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய முள்ளுத் தேங்காய் செய்கைக்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 6 மாதங்களுக்கு முன் முள்ளுத் தேங்காய் செய்கைக்கு தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, தற்போதுள்ள முள்ளுத் தேங்காய் செய்கையை ஒரு தடவைக்கு 10 சதவீதம் முழுமையாக அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக இறப்பர் அல்லது சுற்றுச்சூழலுக்கு பொருத்தமான ஒரு பயிர்ச் செய்கைகயை மேற்கொள்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.