file photo: Facebook/ Sri lankan Embassy in Qatar
கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டிருந்த 30 ஆயிரம் இலங்கையர்கள், தொழிலை இழந்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே, தொழில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டிருந்த 122 இலங்கையர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை சவுதி அரேபியாவில் 36 பேரும், குவைட்டில் 36 பேரும் டுபாயில் 24 பேரும், கட்டாரில் 9 பேரும் ஓமானில் 7 பேரும், லெபனானில் 4 பேரும், ஜோர்தானில் 3 பேரும், பஹ்ரைனில் 2 பேரும், இஸ்ரேலில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தொற்று நிலைமை காரணமாக 14 நாடுகளில் இருந்து நாடு திரும்பிய 56,403 இலங்கையர்களில் 30,832 பேர் தொழில்வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும் தொழில் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள 4 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.