
நாட்டில் அனைத்து பாடசாலைகளுக்கும் இரண்டாம் தவணை விடுமுறையை நாளை முதல் வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.
கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஒருவார காலத்திற்கு மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்த நிலையிலே தற்போது நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.