February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஐநா தீர்மானத்துக்கு எதிராக கட்சி பேதங்களைக் கடந்து அணி திரள வேண்டும்’: அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்

ஐநா பேரவையில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக கட்சி பேதங்களை மறந்து, அனைவரும் அணி திரள வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், அஸ்கிரிய பீடத்துக்கு விஜயம் செய்த போதே, வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த முக்கியமான கட்டத்தில் இலங்கையர்கள் அனைவரும் ஒரு நாடாக ஐக்கியப்படாவிட்டால், எதிர் சக்திகள் நன்மையடைந்துவிடும் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

‘இலங்கை இராணுத்தினர் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்பதை முழு உலகமும் கண்டது’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு சார்பான தரப்பினர் முன்வைக்கும் அழுத்தங்களைப் பொருட்படுத்தாமல், இன, மத, கட்சி பேதம் கடந்து இலங்கையர்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் அஸ்கிரிய பீடாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.