
கொரோனா அச்சம் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாளை முதல் வெள்ளிக்கிழமை வரையில் மாவட்டத்தில் அனைத்து அரச, தனியார் பாடசாலைகளும் மற்றும் தனியார் வகுப்புகளும் மூடப்படும் என்று சற்று முன்னர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா, திவுலபிடிய பகுதியில் கொரோனா வைரஸ் நோயாளியாக இனம் காணப்பட்ட பெண்ணுடன் தொடர்புடைய சுமார் 400 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 400 பேருக்கும் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.