May 23, 2025 14:33:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆயருக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் அஞ்சலி

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று நடத்தப்பட்டது.

வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது ஆயரின் உருவப் படத்திற்கு மலர்தூவி,மெழுகுவர்த்தி ஏற்ற அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், கறுப்புகொடிகள் பறக்கவிடப்பட்டு துக்க தினமும் அனுஷ்டிக்கப்பட்டது.

இதேவேளை ”எமது இனத்திற்காகவும், நீதிக்காவும் போராடிய உன்னதமான மனிதரான ஆயரின் மறைவு எமக்கு பேரிழப்பாகும்” என்று காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.