தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் கொழும்பில் இருந்து தூர இடங்களுக்கான விசேட பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளனன.
இந்நிலையில் தூர இடங்களுக்கு பயணிக்கும் பஸ்களை கண்காணிக்கவென சிவில் உடையில் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த பொலிஸ் திணைக்களம் நடவடிக்கையெடுத்துள்ளது.
நாட்டில், ஏப்ரல் 10 முதல் 20 வரையான காலப்பகுதியிலேயே அதிகளவான வீதி விபத்துக்கள் பதிவாகும். இதனால் விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவர்கள் பஸ்களில் சிவில் உடையில் பயணிகளை போன்று, பயணித்து பஸ்ஸின் வேகம், சாரதியின் செயற்பாடுகள் தொடர்பாக கவனம் செலுத்தவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் மட்டும் வீதி விபத்துக்களால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்களால் ஏற்பட்டவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.