April 28, 2025 13:35:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி

மறைந்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், சபையில் அஞ்சலி செலுத்தினார்.

பாராளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியபோது, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தொடர்பாக சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி உரையாற்றினார்.

இதன்போது, ஆயரின் இறுதிக் கிரியை இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்ட சார்ள்ஸ் நிர்மலநாதன், ஆயருக்கு தமிழ் மக்கள் சார்பாக தனது அஞ்சலியையும், வணக்கத்தையும் கூறிக்கொள்வதாக தெரிவித்தார்.

இதேவேளை, ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை யுத்த காலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட ஆபத்துக்களை முன்நின்று தகர்த்து, மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சாட்சியாக உலக நாடுகளில் தன்னை பதிவு செய்தவர் எனவும், அவரின் இழப்பு தமிழ் மக்களுக்கும் கத்தோலிக்க மக்களுக்கும் ஈடு செய்யப்பட முடியாத இழப்பாகும் என்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி குறிப்பிட்டார்.