
சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 24 பேரிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதனால் விசாரணைகளின் பின்னரே நாடு கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஜெர்மனி, சுவிட்சர்லாந்தில் சட்ட விரோதமாகத் தங்கியிருந்தனர் எனக் கூறி, சில நாட்களுக்கு முன்னர் இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.
ஜெர்மனியில் இருந்து 20 பேரும் சுவிட்சர்லாந்தில் இருந்து 4 பேரும் இவ்வாறு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் இராணுவத்தின் கண்காணிப்பில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.