January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு கிளிநொச்சியில் அஞ்சலி!

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் பசுமை பூங்கா வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சிம்மயா மிசன் சுவாமிகள் பங்கு தந்தையர்கள் மற்றும் மதத்தலைவர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, மக்களின் அஞ்சலிக்காக மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ள ஆயரின் உடல் இன்று மாலை இலங்கையில் உள்ள மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன் பேராலய வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.