February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் ஊடகங்களுக்கு இனி அனுமதியில்லை!

மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களின் போது, செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளரான ஜெனரல் கமல் குணரட்ணவினால் இது தொடர்பான சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டங்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிட வேண்டுமாயின், ஊடகவியலாளர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அல்லது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் முடிவடைந்த பின்னர், அந்தக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் தனியாக கலந்துரையாடி தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென குறித்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ‘ஊடகங்களுக்கு விடயங்களை அறிக்கையிடல்’ என்ற தலைப்பின் கீழ் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.