April 22, 2025 2:05:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆயரின் உடல் மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

மறைந்த  ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடல் இன்று மாலை முதல் மன்னார் தூய செபஸ்தியார் போராலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் ஆயர் இல்லத்தில் இருந்து இன்று மாலை  ஊர்வலமாக மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு அவரின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் அருட்தந்தையர்கள்,பாடசாலை மாணவர்கள், பொது மக்கள், என  ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை இன்று மாலை முதல் ஆயரின் உடல் பேராலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நாளை மாலை இலங்கையில் உள்ள மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன்  ஆயரின் உடல் பேராலய வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

ஆயரின் மறைவையொட்டி மன்னார் மாவட்டம் முழுவதும் கறுப்பு, வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.