May 2, 2025 20:29:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தோண்டிய 11 பேர் கைது!

வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோயில் வளவில் புதையல் தோண்டப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து இன்று அதிகாலை குறித்தப் பகுதியில் பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அந்தப் பகுதியில் இருந்து புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் இரண்டு பிக்குகள் உட்பட 11 பேரை பொலிஸார் கைது கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர்களால் நிலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட  உபகரணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், அந்த இடத்தில் இருந்து 2 கார்களையும் ஆட்டோ ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை நாட்டின் மேலும் பல பாகங்களில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திய மற்றும் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மேலும் 10 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.