
இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங் மற்றும் ரஷ்யத் தூதுவர் யூரி மெட்டேரி ஆகியோரை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளித்தமை குறித்தும் மற்றும் இலங்கையில் கொவிட் 19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நல்கிய உதவிகளுக்காகவும் ரஷ்யா மற்றும் சீன அரசாங்கங்களுக்கு அமைச்சர் தினேஸ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன் சீனா மற்றும் ரஷ்யாவுடனான இருதரப்பு நட்புறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.