2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதலுக்கு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இலங்கையில் உள்ள கத்தோலிக்கர்களுக்கும் அந்த அமைப்பு ஒருமைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.
ஈஸ்டர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த சகோதர, சகோதரிகளை நினைவுகூர்ந்துள்ள முஸ்லிம் கவுன்சில், அவர்களுக்கு தாமதமின்றி நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கையில் அனைத்து வகையான தீவிரவாதங்களும் இல்லாதொழிக்கப்பட்டு, அமைதியையும் சகவாழ்வையும் உறுதிப்படுத்துவதற்கு முஸ்லிம்கள் உட்பட அனைத்து இலங்கையர்களும் அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.