
220 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளைக் கடத்த முயன்ற ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றின் மேற்பார்வையாளராக கடமையாற்றுபவர் என்று தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் 17 கிலோ கிராம் நிறையுடைய தங்கக் கட்டிகளை விமான நிலையத்திற்குள் கொண்டு செல்ல முயற்சித்த போதே, கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தின் சுங்கக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.