தவறிழைக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறுவது, பொலிஸ் திணைக்களத்தின் மீதான பொதுமக்கள் நம்பிக்கையைப் பாழ்படுத்தும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற பொலிஸ் அதிகாரிகளின் மோசமான நடவடிக்கைகள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
எந்தவொரு சூழ்நிலையிலும் சட்ட வரையறைகளை மீறி, பொலிஸ் அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகளின் வன்முறை நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுத்து, பொலிஸ் திணைக்களம் மீதான நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்றும் குறித்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் தாம் தொடர்ந்தும் கண்காணிப்பாக இருப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.