May 23, 2025 7:57:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரும்பு சேகரிப்பு நிலையத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் பலி; மூவர் காயம்-அவிசாவளையில் சம்பவம்

அவிசாவளை – இரத்தினபுரி பிரதான வீதியின் மாதொல பகுதியிலுள்ள இரும்பு பொருள் சேகரிப்பு நிலையமொன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் பலியானதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நபரொருவர் எரிவாயு சிலிண்டர் ஒன்றை வெட்ட முற்பட்ட போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் அவிசாவளை, புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதான மூர்த்தி எனவும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.